Thursday, December 26, 2019

மிகப்பழமையான ஓவியங்கள்

உலகில் சித்திரக்கலை ஆரம்பித்த காலத்தை உறுதியாக கூறமுடியாவிட்டாலும், வரலாற்றுக்கு முற்பட்ட கற்குகைகளில் (பலியோதிலிக், நியோதிலிக் கால மனிதர்களால் வரையப்பட்ட மிகப்பழமையான ஓவியங்கள் பல ஆய்வுகளின் போது கிடைத்துள்ளன. ‘PALIO’ எனும் சொல் பழைய/OLD ஏனும் அர்த்தத்திலும் ‘lithic’ எனும் சொல் கல்/stone எனும் அரத்தத்திலும் வழங்குவதாகும். இவ் வழக்கத்தில் paliothilic period என வரலாற்றுப் பிtவு ஏற்படுத்தப்பட்டது. இக் காலத்தை பழைய கற்காலம் ‘old stone age’ எனவும் அழைக்கப்படுகின்றது. (http://daphne.palomar.edu/mhudelson.studyGuides/PaleoNeo WA.html
இக் கால மனிதர்கள் மனிதாபிமானத் தன்மையில் 90 வீதமானவற்றையே கொண்டிருந்தார்கள்.
இவர்கள் வேட்டையாடி உணவுசேகரித்தலையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். இக்காலம் மனதர்கள் .இப்புவியில் வாழ்ந்த காலத்தில் பெரும்பகுதியை உள்ளடக்கின்றது. (ஏறத்தாழ மனித வரலாற்றில் 99 வீதமானது) இது 2.5 அல்லது 2.6 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னிருந்து இக்காலம் தொடங்குகின்றது. அதாவது கி.மு 40000 ஆண்டுகளிலுருந்த இக் கலைவரலாறு தொகுக்கப்பட்டிருக்கின்றது. இக் காலப் பகுதிக்கு முன்னரே மரம், கல், எலும்பு போன்றவற்றில் பல நுட்பமான மாற்றங்களை செய்துகொள்ள பழகிக்கொண்ட இவர்களின் கலைப் படைப்புக்கள் இரண்டுவிதமாக கலைவடிவங்களில் ஆய்வு செய்யப்படுகின்றுது.

1. பலியோதிலிக் மனிதர்கள் தமது வசிப்பிடங்களில் விட்டுச் சென்ற சிறய அளவிலான பொருட்கள் (MINIACHER ART THINKS)

2. அவர்கள் வசித்த குகைகளில் அவர்களால் வரையப்பட்ட கோடுகள், சித்திரங்கள் மற்றும் சிற்பங்கள். (MIURAL ART)


இக் காலத்தில் கொண்டு செல்லக்கூடய மினிஎச்சர் கலைப் பொருட்கள் அதிகமாக கிடைக்கப் பெறவில்லை. காரணம் அவைகள் மரத்தினாலும் நார்களாலும் மிருகத் தோலினாலும் செய்யப்பட்டிருந்தமையால் அழிந்திருக்கின்றன. எனினும் சிறியளவிலான கல், எலும்பு, யானைத் தந்தம் மிருகத்தின் கொம்பு போன்றதான கலைப் பொருட்கள் ஐரோப்பாவின் அல்டமீரா குகையினை அண்டிய பகுதிகளிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. இப் பொருட்கள் இவர்கள் மிருக வேட்டைக்காக பயன்படுத்தியருப்பதனை அப் பொருட்களின் தன்மையிலிருந்த அறியக் கிடக்கின்றது. கரடு முரடான கற்களை மிகவும் கூர்மையாக்கி பயன்படுத்தியிருக்கின்றனர். அத்தோடு மூட நம்பிக்கை காரணமாக சமய சம்பிரதாய செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக செய்யப்பட்ட சிறிய மனித உருவென்று சொல்லத்தக்க சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. அனேகமாக இவர்கள் இவ் உருவங்களுக்கு வேட்டையாடப்பட்ட விலங்கின் இரத்தத்தினை காணிக்கை செய்யதிருந்திருக்க வேண்டும். இதனால் கடவுள் இன்னும் நிறைய மிருகங்களைத் தமக்குத் தருவார் என நம்பினர். இதன்பிரகாரம் மாயவித்தைகளுக்கும் சமய வழிபாட்டிருற்கும் அதிகளவிலான மினிஎச்சர் கலைப் பொருட்கள் உருவாக்கப்பட்டன. இது போல கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆபிரிக்காப் பிரதேசத்துக் குகைகளில் இருந்து அதிகமான கலைப் படைப்புக்கள் கிடைத்துள்ளன. கடினமான யானைத்தந்தத்தில் ஆன ஆயுதங்கள் சில கற்குகைகளுல் இருந்து கிடைத்துள்ளன. எனினும் 'இவர்கள் இவற்றை கலைவெளிப்பாடு என அக்காலத்தில் உணர்ந்திருக்கவில்லை என்றும் பலியோதிலிக் மனிதர்கள் அக் கால சமூகத்தில் வேட்டையில் வெற்றியீட்டவும் பெண்கள் தொடர்பான வளத்தை நோக்கியுமே இச் செயற்பாடுகளைச் செய்தார்கள்' என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களான James Horred and Vicent w.Fallio ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
இக் கால மனிதர்கள் தங்கள் குகைகளுக்குள் வரையப்பட்ட ஓவியங்கள் (மியூரல் கலை) மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. பிரான்சில் சில குகைகளும் ஸ்பானியாவில் சில குகைகளிலும் இச்சித்திரங்கள் கிடைத்துள்ளன. இச்சித்திரங்கள் மூலம் அக்காலத்து மனிதர்களது கலை இரசனை,கலைத்திறன்,வாழ்க்கை முறைகள் போன்ற பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதினைக் குறிப்பிட்டாக வேண்டும்.
வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடாத்திய கற்குகைவாசிகள் தாம் கண்ட விலங்குகளை,அவற்றின் அங்க அசைவுகளை தாம் வாழ்ந்த குகைச்சுவர்ப்பரப்புகளிலும் முகடுகளிலும் வரைந்துள்ளனர். பெரும்பாலும் கருப்பொருட்களாகக் கொள்ளப்பட்டவை அன்றாடம் அவர்களது ஆகாரத்தின் பொருட்டு உபயோகித்த எருது, மரை, காட்டுப்பன்றி, காண்டாமிருகம், மாமத், பைசான்எருது, குதிரை போன்ற மிருகங்களின் வடிவங்களும்,சில இடங்களில் மனிதர்களில் பல்வேறு செயற்பாட்டுடன் கூடிய உருவ வெளிப்பாடுகளையும் வரைந்து வர்ணம் தீட்டப்பட்டுள்ளன. இவை முழுவதும் குகைப் பாறையில் வரையப்பட்டவையாக இருக்கின்றன. மக்னீசியம், காபன், ஒட்சிசன் போன்ற மூலப் பொருட்களளைப் பயன்படுத்தியிருக்கன்றனர்.
சித்திரங்களில் காணப்படும் விலங்குகள் இயற்கை அமைப்பிலும் அவற்றின் உண்மையான பிரமாணத்திலும், உயிர்த்தன்மையுடனும், முப்பரிமாண இயல்புடனும்,அவற்றின் அசைவுகளை வெளிக்காட்டும் மெய்நிலைகளிலும் மிகச்சிறப்பாக வரைந்து காணப்படுகின்றன.
கூரிய ஆயுதங்களை உபயோகித்து(கல்,எலும்பு,கொம்பு)புறவடிவை ஆழமாகத்தோண்டி அவற்றில் மிருக இரத்தம்,கொழுப்பு,மண்வகைகள் ஆகியவற்றை உபயோகித்து தயாரித்துக் கொண்ட வர்ணங்களைக் கொண்டு தீட்டப்பட்டுள்ளது. வெள்ளை,கறுப்பு,இருள் மஞ்சள்,சிவப்பு கலந்த கபிலம் போன்ற வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டு உள்ளன.கைவிரல்கள்,மிருகமயிர் போன்றவற்றை வர்ணம்தீட்ட உபயோகிக்கப்பட்டு உள்ளதுடன் வாயினால் ஊதியும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது.
கற்குகையில் வாழ்ந்த மக்கள் இவ்வகையான மிருகங்களின் சித்திரங்களை வரைந்ததற்கு உரிய காரணங்கள் தொடர்பாக விமர்சகர்கள்,ஆய்வாளர்கள் பல்தரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர். ஆதிமனிதன் மூடநம்பிக்கை காரணமாக தாம் வேட்டையாடிய மிருகங்களின் ஆத்மசாந்தியின் பொருட்டு வரைந்து இருக்கலாம் எனவும்,தமது ஓய்வு நேரத்தை அழகியல் இரசனை உணர்வின் மூலம் கழித்து உள்ளனர் எனவும், தமது எதிர்காலச் சந்ததியினர் உணவுக்காக வேட்டையாடு மிருகங்களை இனங்காணவும் அவற்றின்மீதான பயம் இல்லாமல் போகவும் அச் சித்திரங்களை வரைந்ததாகத் தெரிகிறது. இவ்வாறு பிராணிகளை வரைவதனால் மேலும் பல விலங்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரைந்து இருக்கலாம் என பல கருத்துக்கள் நிலவுகின்றன. வடக்கு ஸ்பானியா,வடக்கு ஆபிரிக்கா,பிரான்ஸ்,ஒஸ்றியா,அஸ்ரேலியா போன்ற இடங்களில் உள்ள குகைகளில் இருந்து புராதன கற்குகை ஓவியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
வட ஸ்பானியாவில் அமைந்துள்ள அல்ராமீராக்குகையில் ஆதிமனிதனால் வரையப்பட்ட கலைச்சிறப்புடைய இச்சித்திரங்களிடையே பைசன் எருதின் வடிவம் முதல் இடத்தை வகிக்கின்றன. அக்குகை கி;பி 1879 ல் கண்டுபிடிக்கப்பட்டது. எருதின் இயற்கையான அங்க அசைவுத்தன்மைகள்,முக்காரமிடும்(கத்தும்) தன்மைகளை மிக உன்னிப்பாக அவதானித்து அவர்கள் வரைந்துள்ளனர். நடன அமைப்பை நினைவூட்டும் மெய்நிலையில் முன்னோக்கிப் பாய்வதற்கு ஆயத்தமாகும் எருதின் வடிவம் மிகவும் இயற்கையாகக் காணப்படுகிறது. இளைப்பாறிக் கொண்டு இருக்கும் பைசன் எருதின் வடிவம்,ஓடுகின்ற எருது,சாதாரண நிலையில் உள்ள எருதின் வடிவங்கள் உயிர் துடிப்புடனும் தத்ஷரூபமாகவும் வரையப்பட்டு உள்ளன. மேலும் குதிரைத்தலை, சிவப்பு மான்கள் இரண்டு, உயிர்த்தன்மையைக் கொண்டு உள்ளன.இவை சிவப்பு,கறுப்பு,மஞ்சள்,நரை வர்ணங்களால் வர்ணம் தீட்டப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்ட உறுதியான வெளிக்கோடுகளுடன் காணப்படுகின்றன. (சக்தி விமல சார, ஐரோப்பிய கலைவரலாறு,2007, S.PRINT-Colombo பக்:2,3)
கி.பி1910 ல் எதிர்பாராமல் கண்டு பிடிக்கப்பட்ட லஸ்கோ குகை பிரான்சில் அமைந்து உள்ளது. இக்குகை பலியோதிலிக் கலை வரலாற்றுச் சித்திரங்கள் கிடைத்துள்ள முக்கியமான இடமாகும். லாஸ்கோ குகையின் உள்ளே எருதின் வடிவங்களும், மாடு, ஆடு, குதிரை, காண்டாமிருகம், சிங்கம் ஆகிய பிராணிகளின் வடிவங்களும் வரையப்பட்டு உள்ளன.கறுப்பு,மஞ்சள்,கபிலம் போன்ற வர்ணங்களால் தீட்டப்பட்ட 17அடி நீளம் கொண்ட எருதுகள் சில காணப்படுகின்றன. நீண்ட பிரமாணத்தைக் கொண்ட எருது வரிசைகள் பாய்ந்து செல்லும் தன்மையில் உள்ள இப்பகுதி எருதுகளின் குகை என்னும் பெயரில் புதைபொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வேகமாக முன்னால் பாயும் பசு ஒன்றின் வடிவம் தத்ரூபமாகவும் சலனத்துடன் கூடிய மெய் நிலையிலும் மிகச் சிறப்பாகக் காணப்படுகிறது.காட்டுப்பன்றி ஒன்றின் புடைப்புச் செதுக்கல் ஒன்றும் காணப்படுகின்றன.இக்குகையில் மரண காயம் அடைந்த பைசன் எருது மனிதனை காயப்படுத்திக் கொன்று போட்டு உள்ள காட்சி ஒன்றும் லாஸ்கோ குகையில் காணப்படுகிறது. இதில் பைசன் எருதின் முன்னால் விழுந்து கிடக்கும் மனித வடிவம் ஒன்றும் அருகில் வில்லும் அம்பும் உள்ளன. இக்காட்சி மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளது. அக்காலத்து மக்கள் தாம் கண்டவற்றை மனதில் வைத்து வரைந்து உள்ள தன்மை புதுமையான ஒன்றாகும்.

பிரான்சில பிரணீஸ் மலையின் கற்சுவரில் ஓடுகின்ற மரையின் வடிவமும் அதனுன் மரைக்குட்டி ஒன்றும் ஓடுகின்ற காட்சி உள்ளது. இடைவெளிகளை நிரப்புவதற்கு மீன்களின் வடிவம் காணப்படுகின்றன.
பிரான்சில் தோர்தோன் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள பலியோதிலிக் வரலாற்றுக் காலத்துக்குரிய பொண்டி டுகோமே குகையில் கறுப்பு இரேகையால் வரையப்பட்ட 'மாமத்'எனப்படும் விசாலமான யானை போன்ற வடிவம். மேல் நோக்கி வளைந்து நீண்டு காணப்படும் தந்தங்களுடன் சரீரம் முழுவதும் உரோமம் நிறைந்து காணப்படும் வகையில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. குதிரை,பனிமான் உருவங்களுள் இயற்கையாகப் பிரயாணம் செய்யும் வகையில் வரையப்பட்டுள்ளது. பனடமான் வரையும் போது கொம்புகளுக்கு கடும் வர்ணஇரேகையாலும், சரீரத்தின் கீழ்ப்பகுதி மென் வர்ணத்தாலும் வரையப்பட்டிருக்கிறன்றது. வடக்கு ஸ்பானியாவில் உள்ள கோகுல் குகையில் மிகப் பழமையான ஓவியங்கள் கிடைத்துள்ளன.இங்கு காணப்படும் பிராணிகளின் வடிவங்களிலும் பார்க்க முக்கியத்துவம் பெறும் சித்திரம்,நிர்வாணமாக நிற்கும் இளைஞனைச் சுற்றி நடனம் ஆடும் பெண்களின் வடிவங்களைக் கொண்ட சித்திரங்களாகும்.
ஸ்பானியாவில் பின்டால் குகை பலியோதிலிக் காலத்து மனிதர் பிராணிகளின் சகல அங்கங்கள் தொடர்பாகவும் மிகக் கவனம் செலுத்தி உள்ளனர் என்பதற்கு இங்கு உள்ள சித்திரம் ஒன்று உதாரணமாகும். யானை ஒன்றை வரைந்து அப்பிராணியின் இதயம் உள்ள இடத்தைக் குறிப்பிட்டு உள்ளது வியக்கத் தக்கதாகவுள்ளது.
இவ்வாறாக பிரான்சில் உள்ள நியோக்ஸ் குகையில் வரைந்துள்ள பைசன் உருதின் இதயம் உள்ள இடத்தில் அம்புக்குறி இட்டுக்காட்டப்பட்டுள்ளது.சில இடத்தில் அவ் இடங்களில் சிவப்புநிறத்தால் காட்டப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இது போலவே மொறெல்லா வேலாக் குகையில் மனிதர்கள் சிலர் அம்பு வில்லுடன் வேட்டையாடும் காட்சி காணப்படுகின்றது. இது கிமு. 10 000 ஆண்டுகளுக்குரியது எனக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது. இக்காலப்பகுதியில்தான் அம்பு, வில் கொண்டு வேட்டையாடும் பொறிமுறை தோற்றம் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
பலியோதிலிக் கால மனிதர்கள் பெண்களை வளமாகக் கருதினர் காரணம் அவர்கள்தான் வேட்டையாடுதலுக்கான மனித வளத்தினைப் பெற்றுத் தருகிறார்கள் என கருதினர். அதனால் அவர்கள் படைக்கும் சிற்பங்களுக்கு மார்பகங்களையும் வயிற்றினையும் பெரிதாக (நிறைமாத கற்பிணிபோல் ) படைத்தார்கள். எனெணில் இருக்கும் வயிற்றினையும், பால்கொடுக்கும் மார்பகங்களையும் பெண்களுக்கான , தங்களுக்கான வளங்கள் எனக் கருதினர். இதனால் வீனஸ் உருவங்கள் அவ்வாறு படைக்கப்பட்டது. இதற்கு ஆதாரமாக ஒஸ்றியாவிலிருந்து கிடைக்கப்பொற்ற பெண் வடிவ WILLFNDIRF VENUS சிலையைக் குறிப்பிடலாம். கி.மு 21000ல் சுண்ணாம்புக் கல்லில் நிர்மானிக்கப்பட்ட இச்சிலை 4 ½ அங்குலம் உயரத்தைக் கொண்டது. இப்பொழுது ஒஸ்றியாவில் வியானா அரும்பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தோன் என்னும் பிரதேசத்தில் பெண் வடிவ செதுக்கல் ஒன'றும' கிடைத்துள்ளது. அத்துடன் கல்தூனில் செதுக்கப்பட்ட மான்களின் வடிவமும் கிடைத்துள்ளனஇ மாடலீன் குகையிலிருந்து மான் கொம்பில் செதுக்கப்பட்ட பைசன் மாட்டின் வடிவமும் அவுடோபேட் குகையிலிருந்து எடுக்கப்பட்ட பைசன் மாட்டின் வடிவம் இரண்டும் கிடைக்கப்பட்டிருந்தன.

No comments: